திங்கள், 15 ஜூன், 2009


மகள் இறந்த துக்கம் கலைவதற்குள் மைக் டைசனின் மறுமணம்


ஹெவி வெயிட் குத்து சண்டை வீரரும் பிரச்சனைகளும் இணைபிரியாத மனிதருமான மைக் டைசனின் நான்கு வயது மகள் 'எக்ஸடஸ்" சமீபத்தில் உடற்பயிற்ச்சி சாதனதிலுள்ள கேபிளில் சிக்கி உயிரிழந்தார். இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மீடியாக்கள், டைசன் வாழ்வில் இது ஒரு பேரிடி என்றும் அவருக்க வருந்துவதாகவும் கருத்துகள் தெரிவித்து இருந்தன. சச்சரவுகளில் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் டைசன் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் குத்து சண்டை போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டார் என்பது தெரிந்ததே!. இந் நிலையில் இந்த சம்பவம் அவருக்கு மிகவும் அதிர்ச்சியடைய செய்திருந்தது. ஆனால, மகள் இறந்து சில நாட்களே ஆன நிலையில், டைசன் தனது பெண் நண்பரான "லக்கிகா ஸ்பைஸர்" என்பவரை மணந்துள்ளார். இவ்ர் . இதன் மூலம் டைசனுக்கு, மூன்றாம் மனைவி ஆகிறார். மகளின் மரணத்திற்கு துக்கம் சொன்னவர்கள் இப்போது வாழ்த்துவார்களா ?

செவ்வாய், 2 ஜூன், 2009

சந்தோசமான ஊழியராக இருக்க யோசனைகள் பத்து

உங்களுக்கு நினைவு இருக்கிறதா? .... என்றைக்காவது .. அதிகாலையில் மிகவும் ஆர்வத்துடன் எழுந்து, புறப்பட்டு தயாராகி இருந்தது. அது, உங்கள் கல்லுரி ஆண்டு விழா அல்லது ஏதாவது போட்டி தேர்வு, ஏன் உங்கள் திருமண நாளாக இருக்கலாம். அல்லது வாரத்தின் முதல நாள் திங்கள் கிழமை காலை அலுவலகத்திற்கு செல்லும் வேலையாகக் கூட இருக்கலாம். இதில் உங்களுடைய பதில் கடைசியாக சொல்லப்பட்ட காரணம் என்றால், நிச்சயமாக நீங்கள் ஒரு சந்தோசமான ஊழியராக இருப்பீர்கள் .
ஆனால், மேற்கண்ட சந்தர்ப்பங்களால் மட்டும் அவரை சந்தோசமான ஊழியராவார் என சொல்ல முடியாது. அலுவலகத்தில் அவருக்கு கிடைக்கும் உற்சாகமும், தூண்டுதலுமே அவரை சந்தோசமாக இருக்க வைக்கும் மற்ற காரணங்களாகும். மேலும் சந்தோசமாக இருப்பதும் , இல்லாமலிருப்பதும் நம் கையில் தான் இருக்கிறது.
ஒரு ஊழியர் சந்தோசமாக இல்லாமலிருப்பதற்கான சில காரணங்களை பார்ப்போம்.
- திறமைக்கு மதிப்பின்மை
- அலுவலக அரசியல்
- ஒத்துழைக்காத சக ஊழியர்கள்
- புரிந்துக் கொள்ளாத அதிகாரி
- வேலைகேற்ற ஊதியமின்மை
- வேலையில் நிரந்தரமற்ற தன்மை
- எந்தவித பொறுப்பில்லா வேலை
- சீரான பதவி உயர்வு
- அமர்ந்திருக்கும் இடம்
- அடிப்படை வசதிகள் இல்லாத சூழ்நிலை
இப்படி காரணங்கள் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம். ....
இந்த மாதிரி காரணங்களால், அவர்களிடத்தில் எதிர்மறைக் கருத்துக்கள், செய்யும் வேலையில் ஆர்வமின்மை போன்றவை மேலோங்கி நிற்கிறது இந்த மாதிரி ஊழியர்கள் தான், ஆட்குறைப்புக்கு பலியாகும் முதல் நபர்களாகின்றனர்.
நாம் முதலில் சொன்னது போல், ஒருவரது சந்தோஷமும், துக்கமும் அவர்கள் அதை எடுத்துக் கொள்ளும் முறையிலேயே இருக்கின்றது.
ஆக, சந்தோசமாயிருக்கும் ஊழியா செய்யும் வேலையானது, சந்தோசமில்லாதவரின் வேலையை விட அதிகமாகவும், சிறப்பாகவும் உள்ளது. அப்படி சந்தோசமாயிருக்க உதவும் பத்து யோசனைகளை கீழே பார்ப்போம்.
1) வரும் வாரத்திற்கான வேலைகளை ஞாயிறு இரவே தீர்மானியுங்கள்.
2) உங்களுக்கு சம்பந்தமில்லை, தேவையில்லை என்றாலும் கூட, அதனால் பிறர்க்கு உபயோகமானது, அல்லது சந்தோசம் தருவதானது என்றால் அதைச் செய்ய தயங்காதீர்கள்.
3) மற்றவர் மீது பழி சொல்ல காரணங்கள் தேடும் விளையாட்டை தவிர்க்கவும்.
4) முயன்ற அளவு. மற்றவர்களிடத்தில் உங்கள் கருத்துக்களை நேரடியாகவே பரிமாறிக் கொள்ளுங்கள். தொலைப்பேசி, மின்னஞ்சல் போன்றவற்றை தவிர்க்கலாம்.
5) உங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதில் கவனமாய் இருங்கள் .
6) உங்கள் காரியாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் முடிந்த அளவு உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் .
7) நீங்கள் சுறு சுறுப்பாக, சந்தோசமாக இருக்கும் பழக்கத்தை ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொள்ளுங்கள் .
8) அலுவலக அரசியலில் இருந்து விலகியே இருங்கள் .
9) மற்றவர்களின் முயற்ச்சிகளுக்கு வாழ்த்து தெரிவியுங்கள்.
10) அழைப்பை எதிர் நோக்காமல் மற்றவர்களுக்கு அவர் காரியங்களில் உதவி பண்ணுங்கள் .
" மனித வாழ்வின் மகத்துவமே, நீங்கள் மற்றவர்களிடத்திலிருந்து என்ன பெற்றீர்கள் என்பதை விட அவர்களுக்கு என்ன செய்தீர்கள் என்பது தான். " - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் .
ஆக, பலனை எதிபார்க்காமல், ஏதாவது ஒரு காரியம் அடிக்கடி இல்லாவிட்டாலும், எப்போதாவது செய்வதற்கு முயற்ச்சி செய்யுங்கள். இதன் மூலம் மற்றவர்களையும் சந்தோசப்படுத்தி ,நாமும் சந்தோசமாய் இருப்போம்.