செவ்வாய், 21 ஜூலை, 2009

இந்தியாவில் மிக நீளமான ரயில்வே பாலம்


கேரளமாநிலம், கொச்சியில் இந்தியாவிலேயே மிக நீளமான ரயில்வே பாலம் வேம்பநாடு குளத்தின் குறுக்காக அமைக்கப்பட்டு வருகிறது. இதன் நீளம் 4.62 கி மீ ஆகும். இதற்க்கு, முன்பாக பிகார் மாநிலத்தின் தெஹ்ரி அருகில் சோனே நதியின் குறுக்காக உள்ள நேரு சேது ரயில் பாலம் தான் மிக தூரமனதாக கருதப்பட்டு வந்தது. இப்போது, இந்த வல்லர்பதம் பாலம் அதை விட ஒரு கி. மீ. அதிகமாக அமைய உள்ளது. இந்த பாலமானது, மிக குறுகிய காலத்தில், அதாவது பதினெட்டு மாதங்களில், சுமார் ரூ 297.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், கிட்டதட்ட 36000 டன் சிமெண்டும், 11,000 டன் இரும்பும் உபயோகிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்காக 133 தூண்கள் நீருக்குள் சுமார் 40 - 55 அடி ஆழத்தில் அஸ்திவாரம் போடப்பட்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்த பெருமை மிக்க வல்லர்பதம் ரயில் பாலமானது வரும் நவம்பர் மாதத்தில் முடிக்கப்பட்டுவிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.