செவ்வாய், 26 மே, 2009

மன்மதனின் முடிவு

அஞ்சாம் நம்பர் ரூம் சார்! உங்களைத்தேடி யாரோ .... வந்திருக்காங்க,..... லாட்ஜ் வாட்ச்மேன் கீழேயிருந்து கூவினான். இந்த அஞ்சாம் நம்பர்லே நானும், அய்யர் மட்டும்தான் இருக்கோம், அய்யர் நைட் டூட்டி பார்த்துட்டு நல்லா துங்கிகினு இருக்கார். யார்ராது? நம்மாலே தேடிட்டு காலங் கார்த்தாலே, அவுந்த லுங்கிய மடிச்சு கட்டிட்டு வெளியிலே எட்டிப்பர்த்தேன் . பகீரென்றது... அடப்பாவி, இவனா ? ...... இவன் எப்படி வந்தான். மதுரையிலே பக்கத்து தெரு பூதலிங்கத்தோட தம்பி இவன், பேரு பரணி, வெட்டி ஆபிசர், அவங்க அண்ணி எப்ப பார்த்தாலும் இவனை கரிச்சு கொட்டிட்டு இருப்பாங்க, இப்ப சோறு போடாம தொரத்திட்டாங்க போலும் , எப்படியோ நம்ம அட்ரஸ மோப்பம் பிட்டிச்சுட்டு வந்துட்டான்.

இதற்குள் மேலே ஏறி வந்த பரணி, என்ன பாய், சௌக்கியமா..... என்றபடியே உள்ளே வந்தான். ஆங்! .. நீ .. நீ.. எப்படி இங்கே என்று மென்று விழுங்கினேன் . இவனை பார்த்ததுமே பலவித சிந்தனைகள் மனதில் தோன்றி பயமுறுத்தின, இவன் ஏன் இப்போ வந்தான், இங்கத்தான் தங்கபோரனா ? நம்ம பட்ஜெட்டுக்கு, இவன் வேற சோதனையா, எப்படியாவது பேசி, தொறத்திர வேண்டியது தான். என்ன பரணி, திடு திப்புன்னு வந்து நிக்கற!.. என்ன ஊர்லே கடை இருந்ததே ? எப்படி போய்க்கிட்டு இருக்கு, என்று மெதுவாக அவன் வருகை பற்றிய காரணம் அறிய முற்பட்டேன் .
மதுரையிலே லேடி டோக் காலேஜ் பக்கத்துலே அவன் கடையிருந்தது, அதில் முன்னாடி கடை, அதற்குள் ஒரு சிறிய அறை அதுதான் அவனுடைய வீடு. அங்குத்தான் எல்லோர்ருக்கும் சொர்க்கம். பரணிக்கு சிகரெட், குடி பழக்கமெல்லாம் எதுவும் கிடையாது. ஆனால், பெண்கள் விசயத்தில் பயங்கர கில்லாடி, எப்படிப்பட்ட பெண்களையும் வசப்படுத்திவிடுவான். அதனாலேயே, அவனை வீட்டுப்பக்கம் சேர்க்கவே பயப்படுவார்கள் என்றால் பாருங்கள்.

காலேஜ் மாணவிகளுக்கு, ஏதாவது ஓசி கொடுத்து, அயன் படத்தில் சூர்யா, தமன்னாவை சரிக்கட்டுவது போல் பேசி அவர்களை வசப்படுத்திவிடுவான். இவனுடைய லீலைகளை கேட்டு ஜொள்ளு விடுவதே மற்றவர்களின் பொழுது போக்கு. இப்படி இருக்கும் போது, தலைவர் காதலில் மாட்டிக்கொண்டு, அவளுக்கு லவ் லெட்டர் எழுதி கொடுப்பது என்வேலையாக இருந்தது . இப்படிதான் பரணியின், கடை மூலதனம் எல்லாம் கரைந்து கடைசியில் கடனில் முழ்கியது. கடன் கொடுத்த பக்கத்து வீட்டு மாமி கடன் வசூலிக்க மாமாவை அனுப்பிச்சு வசூலாகதலால் அவரே பரணியிடம் கடன் வசூலிக்க வந்து பின் அவனின் மன்மத லீலையில் சிக்கியது தான் அங்கு ஹைலைட். பிறகு சாப்பாட்டிற்கே கஷ்ட்டப்பட்டு, அண்ணன் வீட்டிலேயே தஞ்சம், அங்கு பக்கத்து வீட்டுக்காரர் தங்கச்சி அவன் மீது அக்கறைப்பட்டு , சாப்பாடு கொடுக்கப்போக, பட்சி படிந்து விட்டது, இப்படியே மன்மத பானங்களை தொடுத்து, தொடுத்து கடைசியில் வீ . டி நோய்க்காக சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. அப்புறம், நான் வேலைக்காக சென்னை வந்து விட்டபடியால் அவனைப்பற்றி ஏதும் தெரியவில்லை.

இப்படிப்பட்ட ஆள் நம்மை கிட்டதட்ட நான்கு வருடங்கள் கழித்து என்னைத்தேடி சென்னைக்கு வந்தது கொஞ்சம் ஆச்சரியமும் , கலககமும் அடையச்செய்தது. என்னய்யா ! அப்படி முழிக்கிறே ...... என்று என் நினைவுகளை தகர்த்தான் பரணி. அது வந்து ... ஒண்ணுமில்லை ..... ரொம்ப நாள் கழிச்சு பர்க்கிறேன்லே ......அதான். அவனை குளிக்கச்செய்து, டிபன் சாப்பிட அழைத்துச்சென்றேன். அப்புறம் , என்ன விஷயம், ஊர்லே எல்லோரும் சௌக்கியமா? என்று.... பேச்சை ஆரம்பித்தேன். பின் என் நிலைமையை மெதுவாக சொல்லினேன். இந்தா ..... பாரப்பா, .... இங்க லாட்ஜ்லே ரொம்ப ஸ்ட்ரிக்ட் , கெஸ்ட் தங்கறது பிரச்சனை, வாட்ச்மேன், இரண்டு நாள் தான் பார்ப்பான் ....பின்னே, நீ இங்கே தங்கறது பிரச்சனை தான் .....என் நிலமைய புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன் என்றேன் . .. இதைக்கேட்டதும் ..... நீ ஒன்னும் கவலைபடாதே, என் பெட்டி மட்டும் இங்கே, இருக்கட்டும், மத்ததே நான் சமளிச்சுக்கிறேன்னு, எனக்கு சமாதானம் சொன்னான். அப்போ ... நீ ... எங்க தங்குவே என்று கேட்க முடியாமல் கேட்டேன். இரண்டு, நாள் பார்க்கலாம், என் மாமா இங்கத்தா, ஆவடிலே இருக்கார், அவரைபர்த்துட்டா...அப்புறம் எல்லாம் சரியாயிடும், என்னாலே ஊருக்கு திரும்ப போக முடியாது, என் பிரண்டு இங்க எனக்கு வேலை இருக்கு வான்னு ... சொல்லிருக்கான்அதனாலே, நீ கவலை பட வேணாம்... ரைட் ... உன் பெட்டிய மட்டும் இங்க வச்சுக்க, நான் ஆபிசுக்கு போயிட்டு சயங்கலமா ஆறு மணிக்கு வந்துருவேன், என்று அவன் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்ட நிம்மதியில், பஸ் ஏறி ஆபிஸ் சென்றேன்.
இப்படியே இரண்டு நாட்கள் நகர்ந்தன, ஆனால் அவன் சொன்னபடி மாமாவை கண்டுபிடிக்கவில்லை, தினமும் காலையில் புறப்பட்டுச்செல்வான். மீண்டும், இரவில் வந்து நேராக மொட்டைமாடியில், துங்கிக் கொள்வான் வாட்ச்மேனை, எப்படியோ ... சரிக்கட்டிவிட்டான், அவனை பார்த்தாலே வாட்ச்மேன் சலாம் சொல்கிறான் ..... என்ன செய்வது, எல்லாம் அவன் யோகம் தான். ஊரில் கூட இவன் சாப்பாட்டிற்கு காசில்லாவிட்டலும் அவன் முக ராசிக்கு சாப்பாட்டு அவனைத்தேடி வரும். ஆள் பார்க்க உயரம் கம்மி என்றாலும் நல்ல சிகப்பாக இருப்பான், மீசை வேறு எடுத்து விட்டதால் வடக்கத்தி ஆள் போல் காணப்படுவான். படித்ததோ பத்தாம் வகுப்புத்தான், ஆனால்.. பேசினால் பெரிய புத்திசாலி என் நினைக்க தோணும்.
ஒரு சமயம், அங்கு கல்லுரிக்கு பிரான்ச் மொழி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை, காதரின் இவன் கடைக்கு வந்திருந்தாள். பரணி தன் பட்லர் இங்கலிஷ் மூலம் அவளுடைய நண்பன் ஆகிவிட்டான். அவனுடைய ஓட்டை சைக்கிள் வாங்கிச்செல்ல அடிக்கடி வந்து போக கடைசியில் அவர்கள் உறவு எல்லைக்கடந்து விட்டது. அதனால் தான் எல்லோரும் , அவனிடம்... உனக்கு மட்டும் என்ன மச்சமோ, யார் வேண்டுமானாலும் உன்னிடம் படிந்து விடுகிறார்களே என பொறாமை பட்டதுண்டு.
சில நாட்களாக பரணி ரூம் பக்கம் வரவில்லை, ஏன் என தெரியவில்லை ... நானும் தேட வில்லை. ஒரு நாள் நேராக ஆபிசுக்கே வந்தான். அவன் மாமாவை பார்த்ததாகவும், அவர் வீட்டிற்கே, அழைப்பதாகவும், அதனால் பெட்டியை எடுத்து செல்ல வந்ததாக கூறினான். ஆள், பர்ர்க்க சோக்காக ...இருந்தான் . என் உதவியாளை கூப்பிட்டு, அனைவருக்கும் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கச்சொல்லி நூறு ரூவாத் தாளை நீட்டினான். அவன் பர்சில், ஒரு நூறு ரூவா கட்டு எட்டிப்பார்த்தது... என்ன ஆச்சர்யம் ..... நேற்று வரை பத்து ரூவா கடன் கேட்டுக்கொண்டிருந்தான் .... இப்போது எப்படி இவ்வளவு பணம், .... வாய் திறந்து கேட்டே விட்டேன் .... எப்படி பரணி,... திடீரென்று பணக்காரனாகி விட்டாய், ஏதாவது லாட்டரி அடித்தாயா ? அதெல்லாம் ஒன்றுமில்லையப்பா .... நான் ஏற்கனவே சொல்லியிருந்தேனல்லவா என் பிரண்டு இங்கு இருப்பதாக , ....அவர் பிசினசில் என்னையும் பாட்னர் ஆக சேர்த்துள்ளார் .... அதென்னப்பா .....இவ்வளவு பணம் குடுக்கற பிசினெஸ் என்றேன். அது எக்ஸ்போர்ட் பிசினெஸ் .... சரி ,.. உனக்கு என்ன வேணும் சொல்லு .. கடைக்கு போகலாம் ... அதெல்லாம் வேண்டாம் எனக்கு வேலை இருக்கு ... இந்தா சாவி .. ரூம்லே போய் உன் petty எடுத்துக்கோ... சாவியை வாட்ச்மேன்ட்ட கொடுத்துரு... என்று சொன்னேன். இவனின் நடவடிக்கை சரியில்லை என மனம் சொல்லியது.
நாட்கள் நகர்ந்தன , நான் ரூமை காலி செய்துவிட்டு ... சைதாப்பேட்டையில் ஒரு சிறு அறை எடுத்து சென்று விட்டேன் ...... ஒரு நாள் காலையில் வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது, மணி ஆறு இருக்கும், யார்ரென்று பார்த்தல், பரணி ஒரு பெரிய சூட்கேஸ் எடுத்துக்கொண்டு அட்ரெஸ் விசாரித்து கொண்டிருந்தான் ... எனக்கு தூக்கி வாரிப்போட்டது... இவன் நாம் எங்கே போனாலும் வந்து விடுகிறானே ..... வெளியில் போகலாமா வேண்டாமா என ஒரு கணம் யோசித்தேன் ......போகாவிட்டாலும் எப்படியும் கண்டு பிடித்து விடுவான் ...எமகாதகன் என்று திட்டியவாறு கதவை திறந்து அவனை உள்ளே கூப்பிட்டு வந்தேன் .
வந்தவன்என்னப்பா சொல்லாமல் கொள்ளாமல் ரூமை காலி செய்து வந்து விட்டாய், உன் ஆபிஸ் உதவி ஆள் தான் சொன்னான் நீ இங்கு இருப்பதாக..... புரிந்து விட்டது இவன், அவனுக்கு, காசு கொடுத்திருப்பான் ....உடனே அவன் அட்ரஸ் கொடுத்துவிட்டான், ..... சரி என்ன இவ்வளவுபெரிய சூட்கேஸ் , அதுவும் இந்த வேளையில் , என்ன ஊரிலிருந்து வருகிறாயா ?........ என்றேன் ... இல்லையப்பா ஒரு நல்ல பார்ட்டி கிடைத்தது, பிசினஸ் பண்ணி விட்டேன், என்று சொன்னவாறு சூட்கேசை திறந்து உள்ளே இருந்து பொருட்களை வெளியில் எடுத்து போட்டான் ..... அதில் ஒரு குடும்பத்தின் பயணத்திற்கான பொருட்கள் காணப்பட்டன, அதுவும் வெளி நாட்டு பயணியின் போன்ற தாகப் பட்டது, மற்றும் விலை உயர்ந்த எலெக்ட்ரானிக் சாமான்கள் இருந்தன.
எனக்கு இலேசாக புரிந்தது .....இவன் எதோ கெட்ட காரியம் செய்கிறான் என்று... அதற்குள் ... அவன் என்னை சமாளிக்கும் விதமாக ... விலை உயர்ந்த பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு ....மற்றவற்றை நீ எடுத்து கொள் எனக்கு இந்தப் பொருட்களை விற்க வேண்டும் என சொல்லிக்கொண்டே கிளம்பினான். எனக்கு .... உடனே கோபம் வந்தது, இங்கே பார் ... நீ .... என்ன செய்கிறாய் என்று எனக்கு புரிந்து விட்டது, சென்ட்ரலில் ரயிலில் வரும் பாரின் பயணிகளின் பெட்டிகளை திருடி கொண்டு வந்து வியாபாரம் செய்து காசு பார்கிறாய் ... அதான் உன்னிடம் இவ்வளவு பணம் . நீ எப்படியோ போ..... ஆனால், என்னை தொந்தரவு செய்யாதே ... நீ மாட்டினால் , உன்னுடைய இந்த பொருட்கள் இங்கு இருப்பதற்காக எனக்கும் ஆபத்து ...இதை எடுத்துக் கொண்டு போய்விடு என்று கத்தினேன்.
உடனே அவன் உனக்கு, எதுவும் வராது, நாளைக்கே நான் வந்து இதை எடுத்து செல்கிறேன் என்று கூறிச் சென்றுவிட்டான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .... அலுவலகம் சென்று நாள் முழுவதும் பயத்துடன் இருந்தேன். இவனால் நமக்கு எப்படிப்பட்டத் தொல்லை இது .
ஒரு முடிவுக்கு வந்தவனாக சாயந்திரம் அறைக்குச் சென்றவுடன் அந்த சூட்கேசில் உள்ள துணிகள், மற்றும் பொருட்களை சுருட்டி ஒரு பையில் திணித்துக் கொண்டு நேரே கூவம் ஆற்றில் போய் அவைகளை வீசி விட்டு வந்தேன். எல்லாம் விலை உயர்ந்த துணிகள், பெண்களின் உள்ளாடைகள், காலணிகள், அலங்காரப் பொருட்கள் என்று பலவிதமானவை அதில் இருந்தன. . மீண்டும் பரணி வரவே இல்லை.
பரணி ஒரு சந்தர்ப்ப வாதி , தன்னுடைய வசதிக்காக மற்றவர்களின் அசௌகரியத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். மாமாவின் வீட்டில் தஞ்சம் புகுந்த பின் அங்குள்ள பக்கத்து வீட்டுப் பெண்ணை கவரத் தொடங்கியுள்ளான், இது தெரிந்த மாமா, அந்தப் பெண்ணை தான் ஏற்கனவே, முயற்சித்துக் கொண்டிருப்ப தாக கூறியுள்ளார். இதனால், மாமாவிடம் முறைத்துக் கொண்டு பக்கத்திலேயே, ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளான் என்றும், தன்னுடைய சம்பாத்தியத்தை பெரும்பாலும் அவர்களுக்காக செலவு செய்வதாகவும் ஊரிலிருந்து வந்திருந்த நண்பர் மூலம் தெரிய வந்தது .
ஒரு நாள் ஆபீஸில் என் உதவி ஆள் முகம் மலர யாருக்கோ முகமன் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தான்., பார்த்தால், பரணி, கழுத்தில் கனமான தங்கச் சங்கலி மினுமினுக்க, கண்டெக்டர் போல ஒரு தோல் பையை தொங்கவிட்டுக் கொண்டுத் தோரணையே மிடுக்காக ஹாய் என கை ஆட்டிக் கொண்டு என்னருகில் வந்து நின்றான். எனக்கு அவனைப் பார்த்ததும் திகைப்பாக இருந்தது.
இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, என்ன மைனர் சார், எப்படி இந்தப் பக்கம், நம்மள பார்க்க எப்படி மனசு வந்தது, அய்யா , பெரிய ஆளாகி விட்டிங்க போல, என்று நக்கலடித்தேன். இல்லப்பா, ஒரே பிசி, அதா வர முடியல, அப்படியா , ..... நா நெனைச்சேன் வேலூர் பக்கம் போயட்டியோன்னு நெனைச்சேன் . தோல் பையிலிருந்து நூறு ரூவா கட்டிலிருந்து ஒன்றை உருவி அனைவருக்கும் , காபி , பஜ்ஜி சூடாக வாங்கி கொடப்பா என்று பையனை விரட்டினான். இதை எதிர்பார்த்திருந்த பையன், சந்தோசமாக சென்றான். எல்லாம் பணம் பண்ணும் செயல், நாமும் காசுக் கொடுத்துத் தான் வாங்கி வரச் சொல்கிறோம் . இவன் சொன்ன உடன் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் செல்கிறான்.
இதை தான் மச்சம் என்பதா ! .....என்ன பரணி என்ன கோலம் இது, வர வர பெர்சனாலிட்டி கூடுது, ஏதாவது காசு சேர்த்து வைச்சு ஒரு கடைய போட்டுட்டு , கல்யாணம் பண்ணிட்டு செட்டிலாகிட வேண்டியது தானே என அவன் பல்ஸ் பார்த்தேன். ஆமாம்பா, அத தான் உன் கிட்ட சொல்ல வந்திருக்கேன். அவன் மாமாவின் பக்கத்து வீட்டுப் பெண்ணை லவ் பண்ணுவதையும், கல்யாணம் பண்ண முடிவு செய்திருப்பதாகவும், அந்த பெண்ணின் வீட்டார் இவனை நன்றாக பார்த்துக் கொள்வதையும் சொன்னான். இது எனக்கு ஏற்கனவே தெரிந்து இருந்தும் , அப்படியா என்றேன். .... உன்னை பற்றி தெரியும், நீ ஒரு மதன காம ராஜன் என்றும் அறிவேன். ... கல்யாணம் செய்தால் சரி, சும்மா உன் ஆசைக்கு அடி பணிவதற்காக 'டிராமா ' போடாதே என்றேன், அப்புறம் பெண் பாவம் பொல்லாதது, உன்னுடைய லிஸ்ட் ஏறக் குறைய நூறை தாண்டியிருக்கும். அவர்களின் சாபத்திற்கு ஆளாகாதே என எச்சரித்தேன்.
இல்லப்பா ! ......இப்ப.. நா... திருந்திட்டேன்.. ஊர்லே அப்பா , அக்காகிட்ட போய்ச் சொல்லிட்டு அவங்க சம்மதத்தோட கலயாணம் செய்துக்குவேன். அததுக்கு முன்னாலே உன் கிட்ட சொல்லத்தான் வந்தேன் என்றான். நல்லது நடந்தா சந்தோசம் என்றேன். பிறகு , நிறைய அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தேன். மனதுக்கு நிறைவாக இருந்தது, பட்டணம் வந்துக் கேட்டுப் போனாலும் திருந்தி வாந்தால் சரி தான் எனப் பட்டது. அதைவிட நிம்மதி என்ன வென்றால் , இனி இவன் தொல்லை நமக்கு இராது என்பது தான்.
ஒரு வாரம் கழித்து ஊரிலிருந்து தொலை பேசி அழைப்பு வந்திருந்தது. அதாவது, பரணி பற்றிய விவகாரத்தில் ஒதுங்கி இருக்குமாறு சொன்னார்கள். ஏன் என்று புரியவில்லை. மறு நாள் நண்பன் சாரதி, என்னை விட , பரணிக்கு மிக நெருக்கமானவன் ஊரிலிருந்து வந்தவன் என்னை பார்க்க வந்தான். அவன் கூறிய விஷயம் எனக்கு அதிர்ச்சியை தந்தது.
பரணி இறந்து விட்டான் என்ற செய்தி தான் அது, அதுவும் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டான் என்பது. என்னால் நம்ப முடிய வில்லை. போன வாரம் தான் என்னிடம் சொல்லிக்கொண்டு சந்தோசமாகப் போனான்.. கல்யாணம் செய்யப் போவதாக சொல்லியிருந்தான், என்ன நடந்தது என்றேன்.
ஊருக்கு சென்ற பரணி, தன் கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கிட்டு விட்டு, அடுத்த வாரம் புது வீடு பார்த்து விட்டு , அப்பா , அக்காவை அழைத்துக் செல்வதாக சொல்லிச் சென்றுள்ளான். சென்னையில் அவன் கட்டிக்கொள்ள இர்ருக்கும் பெண் வீட்டில் சென்று இந்த சந்தோஷ செய்தியை கூற , அவர்கள் அதை சட்டை செய்ய வில்லை. மாறாக , அந்தப் பெண் அவனை, நீ யாரென்று எனக்கு தெரியாது எனக் கூறி அனைவரும் சேர்ந்து அவனை அவமானப் படுத்தி அனுப்பி விட்டனர். பிறகு தான், அவனுக்கு விஷயம் புரிந்தது, இது அவர்கள் , அவனுடைய பணத்தை குறி வைத்து நடத்திய நாடகம் என்று. இதில் , அவனுடைய மாமாவும் உடந்தை.
மனம் நொந்த பரணி, எத்தனயோ பெண்கள் விசயத்தில் கில்லாடியான அவன், இந்தப் பெண்ணின் மூலம் ஏமாற்றப் பட்டுவிட்டது தாங்க முடியாமல் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து விட்டதாக சாரதி சொன்னான். அவன் உடல், போஸ்ட்மார்டம் முடிந்து ஊருக்கு, எடுத்து சென்று விட்டதாகவும் கூறினான்.
பல பெண்களின் வாழ்க்கையில் புகுந்து விளையாடிய இந்த மன்மதனின் வாழ்வு பெண்ணாலேயே அழிந்தது, ஒரு புறம் வேதனையாக இருந்தாலும் , பெண் பாவம் பொல்லாதது என்பது சரியாகி விட்டது.
இன்றும் அவனுடைய, சூட்கேஸ் பார்க்கும் போதெல்லாம், பரணியின் சீர்கெட்ட வாழ்க்கையை மற்றவர்கள் யாரும் பெறக் கூடாது என்று நினைப்பேன் . ஏன் நீங்களும், இதை ஒரு பாடமாக மற்றவர்களுக்கு கூறலாமே ! .
(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html)

வியாழன், 21 மே, 2009

தமிழ் நாட்டு அரசியலும், பிரபாகரனின் மரணமும்

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், என் கடன் என் பிள்ளைகளுக்கு காபினெட் பதவி வாங்குவதிலேயே என்று கண்ணும் கருத்துமாய் டெல்லியில் தவமிருக்கும் தமிழ்நாட்டு முதல்வருக்கு பிரபாகரன் பற்றிய செய்திகள் கலக்கமடைய செய்தாலும், அதைப்பற்றி துளியும் சட்டைசெயயாமல் முதலில் போனவேலை ஆகட்டும் , பிறகு பிரபாகரனை பற்றி ஒரு இரங்கற்ப்பா முரசொலியில் எழுதி வெளியிட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். அப்புறம் வீரமணியிடம் சொல்லி ஒரு மனித சங்கிலி , உண்ணா விரதம் போன்றவை நடத்திவிட்டு, பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டால் பிரபாகரனை நாடு மறந்து விடும், அப்புறமென்ன, அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை சமாளித்து விடலாம். பிரபாகரன் இருந்தாலும் அரசியல் , இறந்தாலும் அரசியல். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா !
வரும் சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு, ராமதாசையோ , விஜய்காந்தையோ இப்போதே தயார் செய்ய வேண்டும். நமக்கு பிரபாகரன் இருந்தால் என்ன ? செத்தால்என்ன ? தமிழ் எனக்கு உயிர் மூச்சு, அங்கே தமிழனின் உயிர் போச்சு, எனக்கு என் குடும்பம்தான் பெருசு. மக்கள் எப்போதும் இளித்தவாயர்கள் . எப்படியும் அரசியல் செய்துவிடலாம்.

பிரபாகரன் சாகவில்லை

பிரபாகரன் இறந்து விட்டார் என சொல்லப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என்று செய்திகள் வருகின்றன. அதற்கு சாதகமாக இந்த தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது, பிரபாகரனின் உடல் என்று சொல்லப்பட்டதில் செய்யப்பட்ட பிரபாகரனின் தோற்றம் போன்ற மாஸ்கின் தடயம். சடலத்தின் முகத்தில் மொழு, மொழு வென்ற ஷேவ் செய்யப்பட்ட தோற்றம், தலையில் குண்டடிப்பட்டது போன்று வடிவமைக்கப்பட்ட மாஸ்கில் உள்ள கிழிசலின் பொய்த்தோற்றம், மேலும் இலங்கை இராணுவத்தின் மரபணு சோதனை என்கின்ற புளுகு ஆகியவை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதனை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. இதற்கு சாட்சியாக பிரபாகரன் தன்னைப்பற்றிய பொய்ச்செய்திகளை தொலைக்காட்சியில் ரசித்துப்பார்க்கும் காட்சி பிரபாகரன் பற்றிய உண்மையை புட்டு வைக்கிரறது.

பிரபாகரன் உயிருடனிருக்கிறார் ?

பிரபாகரன் என்று சொல்லப்பட்ட சடலத்தின் முகத்தில் மொழு, மொழு என்ற ஷேவ் செய்யப்பட்ட மாஸ்கின் தோற்றம்.

பிரபாகரன் உயிருடனிருக்கிறார் ?


பிரபாகரனின் உடல் என்று சொல்லப்பட்டதில் செய்யப்பட்ட மாஸ்கின் தடயம்.

பிரபாகரன் உயிருடனிருக்கிறார் ?

பிரபாகரன் தன்னைப்பற்றிய செய்திகளை ரசிக்கும் காட்சி.



செவ்வாய், 19 மே, 2009

பிரபாகரன் மரணத்தால் யாருக்கு லாபம் ?

இலங்கை ராணுவத்தால் சுடப்பட்டு பின் கண்டெடுக்கப்பட்டதாகவும் , அது பிரபாகரனின் உடல்தான் என்று அதை அவருடைய பழைய பார்ட்னர் கருணா உறுதிப்படுத்தியதாகவும் பிரபாகரனின் சடலக் காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்பியது. அதுமட்டுமின்றி டிஎன்ஏ பரிசோதனையில் அது பிரபாகரன் தான் என்றும், அவரது அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டு உறுதி செய்யப்பட்டது எனவும் அதில் சொல்லப்பட்டது. (வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் http://www.youtube.com/watch?v=EaSL7XinAvk ) இது உண்மையோ , பொய்யோ தெரியாது. ஆனால், இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட கண்டிப்பாக நம்மூர் அரசியல்வாதிகள் முயல்வர்.
பிரபாகரனின் மறைவினால் யர்ருக்கு நன்மை. இந்தியாவிற்க்கா அல்லது இலங்கைக்கா என்றால் அது இந்தியாவிற்குத்தான். சிலருக்கு நிம்மதி பெருமூச்சு, சிலருக்கு அரசியல் ஆதாயம். ஆனால் மக்கள் மனதில் பிரபாகரன் என்றும் ஹீரோ தான். எப்படி சதாமின் மறைவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேப்போல் இப்போதும் நம் மனதில் அவர் நீங்கா இடம் பெற்றுள்ளார் என்பதே உண்மை. இந்த முடிவு மற்றொரு தொடக்கத்துக்கு ஆரம்பமாக இருக்கலாம். அது இலங்கை தமிழர்களின் மறு மலர்ச்சியாக இருந்தால் அவர்களின் தியாகம் வெற்றிப்பெறும்.

திங்கள், 18 மே, 2009

ஆனந்தும் ஆஸ்காரும்

தமிழ் நாட்டிலிருந்து ஏ.ஆர் ரஹ்மான் மட்டும் தான் ஆஸ்கார் வாங்கியுள்ளார் என்று நினைத்தால் தவறு. நமது சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த் ஆறு செஸ் ஆஸ்கார்களை வென்றுள்ளார் என்பது புதிய விஷயம். அவர் தனது முதல் செஸ் ஆஸ்காரை 1997, -ல் வென்றார். பிறகு வரிசையாக 1998, 2003, 2004 மற்றும் 2007 -க்கான பட்டங்களை வென்றுள்ளார் என்பது சிறப்பு. தற்போது அவர் 2008 -க்கான ஆஸ்காரையும் ஆறாவது முறையாக பெற்றுள்ளார். ஐந்துமுறை செஸ் ஆஸ்கார் பெற்ற ரஸ்யரல்லாத முதல் நபர் இவர் என்பது பெருமை.

வெள்ளி, 8 மே, 2009

மலைக்கா ஷெராவத்தை குடிக்க முடியுமா ?

குலுக்கல்அழகி மலைக்கா ஷெராவத்தை பெயரில் புதிய பானம் ஒன்று ஊற்றி கொடுக்கப் போகிறார்கள். "மில்லியன்ஸ் ஆப் மில்க் ஷேக்" என்ற கடையில் ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பழங்களுடன் பாலை கலந்து குலுக்கி பாலில் க்ரீமை மேலே விட்டு இந்த மலைக்கா பானத்தை தருகிறார்கள் . ஏற்கனேவே குலுக்கிய இந்த மலைக்காவை மறுபடியும் குலுக்கினால் இந்த கோடை வெயிலுக்கு நல்லா குளு குளு பானம் தான் என்கிறார் கடைக்காரர். வாருங்களேன் ருசித்து பார்க்கலாம்.

கலைஞர் கருணாநதியின் குடும்பம்


செவ்வாய், 5 மே, 2009

பாக்யராஜ் சொன்ன கருவாட்டு குழம்பு, முருங்கக்காய் கதை.


தேர்தல் பிரசாரம் தமிழ் நாட்டில் சூடு பிடித்துள்ளது. இங்கு சொல்லப்படும் கதைகள் ஏராளம். பிரசாரத்தின் போது நடிகர் பாக்யராஜ் தமக்கே உரிய பாணியில் அரசியல் நடிப்பு பற்றி கூறிய கதை இது. மனைவி ஒருத்தி தன் கணவனுக்கு பிடித்த கருவாட்டு குழம்பும், முருங்கக்காய் சாம்பாரும் செய்து அவனை அசத்த இருக்கும் போது வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்துவிடுகிறார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும், வந்தவர் சமைத்த சாப்பாட்டை முழுவதும் சாப்பிட்டு விட்டால் நமக்கு ஏதும் கிடைக்காது என்று நினைத்து ஒரு நாடகம் ஆடுகின்றனர். அதாவது கணவன் மனைவியை கன்னத்தில் ஓங்கி அறைய, அவள் கதறி அழ ஆரம்பிகிறாள். இதை பார்த்த உறவினர் நிலைமை சரியில்லை என புரிந்து நடையை கட்டுகிறார். உடனே கணவன் எப்படி என் நடிப்பு. நான் அடிப்பது போல் நடித்தேன் அதற்கு அவர் பயந்து சென்று விட்டார் என்றான். அதற்கு மனைவியும், நான் மட்டும் சும்மாவா, அடி விழாமலே அடிபட்டது போல் எப்படி அழுது நடித்தேன் என்றாள். சிறிது நேரத்தில் வெளியில் இருந்து அந்த உறவினர் நான் மட்டும் சும்மாவா! வெளியில் போவது போல் பாவனை செய்து மறைந்திருதேன் என்றார் பார்க்கலாம். இந்த கதையை பாக்யராஜ் அவர்கள் ஜெயலலிதா, வைகோ, மற்றும் ராமதாசின் மக்களை ஏமாற்ற தற்போதைய அரசியல் நடிப்பு பற்றி இப்படி ஒப்பிடுகிறார்.

சனி, 2 மே, 2009

ஒபாமாவின் புது குழப்பம்

ஏற்கனவே கணினி துறையிலிருப்பவர்கள் மடியில் நெருப்பு கட்டிக்கொண்டிருக்கின்றனர். அதை ஊதி மேலும் எரிய வைத்துள்ளார் ஒபாமா. இந்தியாவில், பங்களுருவிலுள்ள கம்பனிகளுக்கு அவுட் சோர்சிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் இனிமேல் தங்கள் நாட்டிற்குள்ளே உள்ள நிறுவனங்களுக்குள் அவுட் சோர்சிங் செயதால் மட்டுமே வரிச்சலுகை பெற முடியும் என்று அறிவித்துள்ளார். இது நம்மவர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. கால் சென்டெர் போன்ற துறைகளில் இருப்பவர் பாடு இனி திண்டாட்டம் தான். ஏற்கனவே, ஐடி துறையிலிருந்து அரசு நிறுவனங்களுக்கும், இன்ஜினியரிங் காலேஜ் வாத்தியார் வேலைக்கு போவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.