செவ்வாய், 27 அக்டோபர், 2009

பதிவர்கள் பலவிதம்!

பதிவர்கள் பலவிதம் என்ற தலைப்பில் பதிவர் நண்பர்கள் பலர் கூடி விவாதித்துள்ளனர், இதனை நண்பர் லதானந்த் தன பதிவில் சுவைபட எழுதி இருந்தார். அதில், பதிவர்களின் தன்மை, வகை பற்றி பார்க்கும் போது நகைச்சுவையாக இருந்தாலும் அதன் கருத்து என்னவோ ஒப்புக்கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

இன்றைய பதிவர்கள் தமெக்கென்று தனி பாணியை கடைப்பிடிக்கிறார்கள். அவர்களின் தகவல்கள் புதியவையாக இல்லாவிடினும், பதிவில் அதை சொல்லும் முறையில் தான் மற்றவர்களால் ரசிக்கப் படுகிறார்கள்.

பதிவர்களின் அணுகும் முறையை பற்றி சில சுவையான விதங்களை பார்ப்போம்.

சமையல் குறிப்புப் பதிவர்கள்
நெட்டுலயோ சமையல் பொஸ்தகங்களையோ ’சுட்டு’ சொந்த வார்த்தைகளில ‘தாளிச்சு’ப் பரிமாறிருவாங்க.

உலக எனிமா சாரி சினிமாப் பதிவர்கள்
இவிங்க கொல தெய்வம் கூகிளாண்டவர்.

சமுதாய முன்னேத்திப் பதிவர்கள்
அப்பப்ப திங்க் பண்ணி சமுதாயத்த முன்னேத்த கடுமையா முயற்சி பண்ணிட்டு மறுக்காவும் தங்க வேலையப் பாக்கப் போயிருவாங்க. ”ரெட் சிக்னல்ல நிக்காம போனவனப் பாத்து எனக்கு அஞ்சு நிமிசம் எதுவுமே சாப்புட முடியாம போச்சு லெஃப்டல ஓவர் டேக் பண்ணுனவனப் பாத்து மூட் அவுட்டாயி உண்ணொரு “போத்தல்” அடிச்சேன்”கிற மாதிரி சமுதாய ஒணர்வு மிக்கவிங்க இவிங்க.

ஏதாவது செய்யற” பதிவர்கள்
நெமபப் பொறுப்புணர்ச்சி மிக்கவிங்க இவிங்க.லேத், டிங்கரிங், பெயிண்டிங், ரிவிட், மாதிரியான வேலைக்கெல்லாம் ஏற்பாடு செய்வாங்க.

பல கூடுப் பதிவர்கள்
ஒண்ணுக்கு மேல பதிவுகள் வெசிருப்பாங்க. (ஒண்ணுக்குனா தப்பா நெனைச்சிராதீங்க! ஒரே ஆசாமி பல பதிவுகள் வெச்சிருப்பாங்கனு சொல்ல வந்தேன்). சொந்தமா எழுதுறதுக்கு ஒண்ணு. மத்தவிங்களத் திட்டுறதுக்கு ஓண்ணுனு இருக்கும். அனானியாய்க் கமெண்ட்டு போட முடியாத சீழ்நெலமையிலும் சாரி - சூழ்நெலமையிலும் கமெண்ட் மாடரேட் பண்ணியிருக்கிறப்போவும் திட்டுறதுக்காகவே ஒரு அய்டி கிரியேட் பண்ணி இருக்குற புண்ணியவானுங்க இவிங்க.

நாட்குறிப்புப் பதிவர்கள்
“காலைல எந்திரிச்சேன். காப்பி குடிச்சேன். கரகரனு வந்துச்சு. ஆபீஸ் போனேன். அங்கியும் வந்துச்சு”. அப்படினு ஆனந்தரங்கம்பிள்ளைனு நெனைசுக்கிட்டு ”அபூர்வ தகவல்களை” அள்ளி வீசுவாங்க. (ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு பத்தித் தெரியாதவிங்களுக்கு சந்திரமௌளீஸ்வரன் விளக்கம் தருவாரா?)

டபுள் ஆக்ட் பதிவர்கள்
ஒரே பதிவரு ஒரே பிளாக்குல ரெண்டு பேர் பேர்ல எழுதுவாங்க. மாறி மாறி அவிங்களே பின்னூட்டமும் போட்டுக்குவாங்க. நெம்ப டமாஸா இருக்கும்.

டூப்ளிகேட் பதிவர்கள்
ஒரிஜினலா எழுத லேசா கஷ்டம் இவிங்களுக்கு. மித்தவிங்க எழுதுறத லேசா மாத்தி எழுதிக்குவாங்க. கேட்டாக்க எதிர்ப் பதிவும்பாங்க. ”என்னைய நம்பி இருக்கிறவிங்கள் நாம ஏமாத்தக் கூடாது பாத்தீங்களா?” அப்படிம்பாங்க. ஒரு கான்ஸப்ட் ஹிட் ஆயிருச்சுனா அத ஒடனடியா லபக்கீருவாங்க.

பச்சோந்திப் பதிவருங்க
பிளாக்குல ஆகா ஓகோனு முன்னேத்தக் கருத்துங்கள திருகலான நடையில எழுதுவாங்க. எழுதுன ஈரம் காயறதுக்குள்ள கூசாம சிபாரிசுக்கும் போவாங்க.

சரோஜாதேவிப் பதிவருங்க
இப்பல்லாம் சரோஜாதேவி புக்ஸ் அதிகமா இல்லைங்கிற கொறைய இட்டு நெரப்புறவிங்க இவிங்க. மண்டை கிண்டைனு சரளமா எழுதுவாங்க. பீர்ல 3000, 5000 அப்படினு இருக்கிற மாதிரி நெம்பர் போட்டு விட்டு ஆட்டுவாங்க.

நாட்டாமைப் பதிவர்கள்
பதிவுலகத்துல எங்க எப்பச் சண்டை சாடி நடந்துச்சுனாலும் இவிங்களுக்குக் கொண்ட்டாடம்தான். ஒடனடியாப் போயி அதிரடியா நாட்டாமை பண்ண ஆரமிச்சிருவாங்க. சமயத்துல திருக்குறள் எல்லாம் கோட் பண்ணுவாங்க.

பரஸ்பரக் கைப் பதிவர்கள்
எனக்கு நீ ஒனக்கு நான் அப்படிங்கிற உயரிய கோட்பாடு இவிங்களது. இவிங்களுக்கு ‘மொய்க்கு மொய்ப் பதிவர்கள்’னு உண்ணொரு பேரும் இருக்குது.

டவுன்லோடு பதிவர்கள்
எதப் பத்தி வேணும்னலும் எழுதுவாங்க. பறவைக் காச்சலா, பணியாரம் சுடுறதா, கேட் வாக் பத்தி எழுதுறதா கேக் செய்யிறதப் பத்தி எழுதுறதா எத வேணும்னாலும் எழுதுவாங்க. டவுன்லோடு இருக்கறவரைக்கும் இவிங்க அதி மேதாவிங்கதான்.

மெனி இன் ஒன் பதிவர்கள்
பர்மா பஜார் பாஷையிலும் எழுதுவாங்க பண்டிதன் மாதிரியும் எழுதுவாங்க. கொங்குப் பேச்சிலும் எழுதுவாங்க கொமுரிகளப் பத்தியும் எழுதுவாங்க.
நன்றி திரு லதானந்த் http://lathananthpakkam.blogspot.com