புதன், 16 டிசம்பர், 2009


பழம் தின்று கொட்டை போட்டவர்கள்

நாம் வேடிக்கையாக சிலரைப் பார்த்து "பழம் தின்று கொட்டை போட்டவர்" என்று சொல்வதுண்டு. ஆனால் அது பறவைகளுக்கு தான் பொருந்தும். ஆம் ! பறவைகள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக காடு விட்டு காடு தாண்டி, கடல் தாண்டி, கண்டம் தாண்டி செல்கின்றன. அப்படி போகும் போது, வழியில் உள்ள மரங்களின் கனிவகைகளை தின்று கொட்டைகளை போட்டுச் செல்லும். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று கேட்கத் தோணும். பறவைகளின் இந்த பழம் தின்று கொட்டை போடும் பழக்கமானது, தாவர இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறதென்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆம். சற்று விவரமாக பார்ப்போம்.

பறவைகள், வழியில் உள்ள மரங்களின் கனிவகைகளை தின்று இளைப்பாறிச்செல்லும். போகும் போது, அது தின்ற கனிகளின், சதை பகுதி மட்டும் அதன் வயிற்றில் செரிமானம் ஆகி, கொட்டைப்பகுதியை அதன் எச்சத்துடனோ அல்லது அப்படியே சாப்பிடாத கொட்டையாகவோ வழியில் இட்டுச் செல்லும். இப்படி கிழே விழுந்த கொட்டைகள் , மண்ணில் விழுந்து முளைத்து, பெரிய தாவரமகிறது. இதை சில சமயங்களில் நாம், பெரிய கட்டிடங்களில் கூட மரங்கள் வளர்வதை பார்த்திருக்கிறோம்..


பறவை ஆராய்ச்சியாளர்கள் பழம் தின்று கொட்டைப்போடும் பறவைகளின் இந்த செயல்களால், தாவர இனப்பெருக்கம் அதிகமாக நடக்கிறது என்றும், அந்நிய தாவர இனபுகுதலும் இதனால் சாத்தியமாகிறது என்றும் கண்டு பிடித்துள்ளனர். மேலும் உலகின் சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் புவி வெப்பமாவது காடுகளின் செழிப்பால் தடுக்கப்படுகிறது.. மக்களின், தேவைகளுக்காக காடுகள் ஒரு பக்கம் அழிக்கப்பட்டாலும்,

பறவைகளின் மூலம் தாவர இனப்பெருக்கம் தொடர்ந்து நடை பெற்றுவருகிறது என்பது தான் உண்மை. பறவைகள் தங்கள் சுயநலத்திலும், பொதுநல சேவை செய்கின்றன. அதிலும், சில குறிப்பிட்ட பறவை இனங்கள் தங்கள் இரைக்காக அதிக பழங்களை அடிக்கடி உண்டு, நிறைய கொட்டைகளை போடுவதால், தாவர இனப்பெருக்கம் தடையின்றி இருப்பதாக சொல்கிறார்கள். அதனால்,பழம் தின்று கொட்டை போடுவதை இனிமேல் சாதரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

1 கருத்து:

Paleo God சொன்னது…

அருமையான கருத்து Rafi அவர்களே... இயற்கை சார்ந்த பல விஷயங்களை பதிவிடவும்..

உங்கள் இடுக்கையை இந்த தகவல் தளத்தில் சேர்த்தால் நல்ல பதிவுகள் பரவலான மக்களுக்கு சென்றடையும்.

http://www.tamilmanam.net/index.html
http://www.tamilish.com/