வெள்ளி, 4 ஜூன், 2010

19வது உலக கோப்பை கால் பந்து ஓர் கண்ணோட்டம்

32 நாடுகள் கலந்து கொள்ள இருக்கும் 19வது உலக கோப்பை கால் பந்து போட்டிகள் வரும் ஜூன் 11 ஆம் தேதி தென் ஆப்பரிக்க நாட்டில் கோலாகலமாக துவங்க உள்ளது. இதுவரை நடந்த 18 போட்டிகளில் ஐந்து முறை பிரேசிலும் , நான்கு முறை இத்தாலியும் மூன்று தடவை ஜெர்மனியும், இரண்டு தடவை அர்ஜென்டினாவும், உருகுவேயும் ஒரு முறை இங்லாந்தும், பிரான்சும் வெற்றி பெற்றுள்ளன.
2006 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த போட்டியில் இத்தாலி, பிரான்சை வென்று கோப்பையை தட்டிச் சென்றது. இதில் பிரான்ஸ் வீரர் ஜிடேன தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்த இத்தாலி வீரர் மார்கோ மட்டேர்ஜியை தலையால் முட்டி நிலை குலைய செய்ததை உலகம் இன்றும் மறக்காது.
பல்வேறு பிரச்சன்னைகளுக்குப்பின் அர்ஜென்டினாவின் பயிற்சியாளராக உருவெடுத்திருக்கும் பிரபல வீரர் மரடோனோ, இந்தமுறை தனது அணி கோப்பையை வெல்லும் என உறுதி கொண்டிருக்கிறார். அப்படி நடக்கும் பட்சத்தில் அதை கொண்டாடும் விதமாக மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்றும் சூளுரைத்திருக்கின்றார்.
இந்த உலக கோப்பையில் விளையாடவுள்ள பந்தின் பெயர் "ஜபுலாணி" என்பதாகும். இதற்க்கு "கொண்டாட்டம்" என்று பொருள். இதில் 11 வண்ணங்கள் உள்ளன. இது கால்பந்து வீரர்கள் எண்ணின்க்கை 11 ஐ குறிக்கும், மேலும் இந்த போட்டியை நடத்தும் நாட்டிலுள்ள 11 இன மக்களையும், அங்கு பேசப்படும் 11 மொழிகளையும் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வீரர்களிடையே இந்தப் பந்தைப்பற்றி கொண்டாடமில்லை. இது ஒன்றும் சொல்லி கொள்ளுவது போல் மிதக்கும் பந்து அல்ல, சூப்பர் மார்க்கட்ல் விற்கப்படும் பிளாஸ்டிக் பந்து போலுள்ளது என்று வீரர்களிடையே எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இப்படி பலவிதமான எண்ணங்களுடனும், ஆரூடங்களுடனும் ஆரம்பிக்க இருக்கும் இப்போட்டியானது வரும் ஒரு மாத காலத்திற்கு ரசிகர்களின் தூக்கத்தை மறக்க செய்யப்போவது என்னமோ உண்மைதான்.
இப்போதே, எல் சி டி தொலைக்கட்சிபெட்டிகளும், சாட்டிலைட் ஓளிபரப்பும் தங்கள் வியாபாரத்தில் சூடு பிடிக்கத்தொடங்கி விட்டன.

2 கருத்துகள்:

Paleo God சொன்னது…

இன்னும் ஆடி மாசமே வரல அதுக்குள்ள இடுகை போட்டுட்டீங்க!!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வற்றதுதான் ரஃபியோட ஸ்டைலா?? :-)

பெயரில்லா சொன்னது…

நம்மாளுங்க கிரிக்கெட் ஆட்டம் பார்த்து போரடிச்சு போச்சு!, இப்போ கால் பந்து ஆடி பாக்கலாமேன்னு தான் . நீங்க டென்ஷன் ஆகாதீங்க ப்ளீஸ் .....