வியாழன், 21 மே, 2009

பிரபாகரன் சாகவில்லை

பிரபாகரன் இறந்து விட்டார் என சொல்லப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என்று செய்திகள் வருகின்றன. அதற்கு சாதகமாக இந்த தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது, பிரபாகரனின் உடல் என்று சொல்லப்பட்டதில் செய்யப்பட்ட பிரபாகரனின் தோற்றம் போன்ற மாஸ்கின் தடயம். சடலத்தின் முகத்தில் மொழு, மொழு வென்ற ஷேவ் செய்யப்பட்ட தோற்றம், தலையில் குண்டடிப்பட்டது போன்று வடிவமைக்கப்பட்ட மாஸ்கில் உள்ள கிழிசலின் பொய்த்தோற்றம், மேலும் இலங்கை இராணுவத்தின் மரபணு சோதனை என்கின்ற புளுகு ஆகியவை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதனை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. இதற்கு சாட்சியாக பிரபாகரன் தன்னைப்பற்றிய பொய்ச்செய்திகளை தொலைக்காட்சியில் ரசித்துப்பார்க்கும் காட்சி பிரபாகரன் பற்றிய உண்மையை புட்டு வைக்கிரறது.

1 கருத்து:

Thennavan சொன்னது…

அன்பார்ந்த தமிழின உணர்வாளர்களே !
இப்போது வெகு அவசரமாக ஒரு காரியம் செய்ய வேண்டும் எனக் கருதுகிறேன் . சிங்கள அரசாங்கம் பிரபாகரனின் உடலை ( ? ) உரிமை கோரினால் தருவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது . இதை பயன்படுத்தி சிங்கள அரசின் முகத்திரையை நாமே கிழித்து எறியலாம் . நமது தமிழ் இன தலைவர்கள் பிரபாகரனின் இரத்த வழி உறவுகளை முன்னிறுத்தி பிரபாகரனின் உடல் என்று கூறப்படும் சடலத்தை உரிமைகோரி , நடுநிலையான மரபணு சோதனையை நடத்தி உண்மையை வெளிக்கொணரலாம் . தேவைப்பட்டால் இநதிய அரசைக்கூட இந்த பணியை செய்ய சொல்லி வற்புறுத்தலாம் . ஏனெனில் அவர்களுக்கும் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனின் மரபணு ஆய்வு அறிக்கை தேவைபடுகிறதே . இந்த வாதத்தை உரத்த குரலில் முன் வைத்தால் போதும் சிங்கள அரசு பின் வாங்கும் . உடனடியாக இந்த கோரிக்கையை உரத்த குரலில் எழுப்புவோம் . உங்களுக்கு தெரிந்த நண்பர்களையும் இந்த கோணத்தில் சிந்திக்க சொல்லுங்கள் ............. செயலாற்றுவோம் .........